அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

Published Date: May 4, 2025

CATEGORY: EVENTS & CONFERENCES

கோவை குரும்பபாளையம் அருகே எஸ்.என்.எஸ். தொழில்நுட்பகல்லூரி உள்ளது. இங்குதமிழகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வளர்ச்சிக்குஆதரவாக இனோவே சன் ஹப் என்ற பெயரில்தொழில் நிறுவன வளாகம் அமைக்கப்பட்டது.

அதை குத்துவிளக்கேற்றி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இதில் புதிய கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு அமைச்சருடன் கலந்துரையாடினர்.

இதையடுத்து உள்ளூர் கண்டுபிடிப்பாளர்களின் ஸ்டார்ட்-அப்நிறுவனங்களையும் அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, ஏ.ஐ. மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் மூலம் உண்மையான உலக சிக்கல்களுக்கான தீர்வுகளை காண வேண்டும். தொழில்நுட்ப புதுமைகளை மாநிலம் முழுவதும் பரப்ப வேண்டும். புதுமை முயற்சிகள் சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டும் அமையக்கூடாது. கோவை முதல் மதுரை, நெல்லை, சேலம் வரை மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள திறமைகளை ஊக்குவிக்க வேண்டும். உலக தரத்தில் போட்டியிடக் கூடிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்றார்.

இதில் எஸ்.என்.எஸ். குழும செயல்பாட்டு தலைவர், சி.எல்.மோகன் நாராயண், எஸ்.என்.எஸ். இனோவேசன் ஹப் தொழில்நுட்ப இயக்குநர் நளின் விமல்குமார், எஸ்.என்.எஸ். தொழில்நுட்ப கல்லூரி எஸ். செந்தூர்பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Media: DAILYTHANTHI